ADDED : நவ 28, 2025 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தெற்கு தெரு செல்வராணி மகள் தீபிகா 16. தேனி சிவராம் நகரைச் சேர்ந்த அழகர்சாமி மகள் சத்தியப்பிரியா 16. தோழிகள் இருவரும் தென்கரை பகுதியில் டுட்டோரியல் கல்லுரியில் பிளஸ் 2 படித்து வந்தனர். திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு, லட்சுமிபுரம் அருகே ஜல்லிபட்டி பகுதியில் சத்யப்பிரியா டூவீலரை ஓட்டிச்செல்ல, தீபிகா பின்னால் உட்கார்ந்து சென்றார். பின்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் காயமடைந்தனர்.
மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

