/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறுவட்ட போட்டிகளில் மாணவிகள் ஆர்வம்
/
குறுவட்ட போட்டிகளில் மாணவிகள் ஆர்வம்
ADDED : ஆக 07, 2025 08:09 AM

தேனி : தேனி குறுவட்ட கபடி, பால்பேட்மிட்டன் போட்டியில் மாணவர்கள், மாணவிகள் திறமையை வெளிப்படுத்தினர். தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் தேனி குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கபடி, மாணவர்களுக்கான பால்பேட்மிட்டன் போட்டிகள் நடந்தது.
கபடி போட்டியில் 14 வயதுபிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பெற்றது.17 வயது பிரிவில் அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் பெற்றது.19 வயது பிரிவில் பிரஷன்டேன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 2ம் இடம் வென்றன.பால் பேட்மிட்டன் போட்டியில் 14, 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி முதலிடமும், மேரிமாதா பள்ளி 2ம் இடம் வென்றன. 19 வயது பிரிவில் மேரிமாதா பள்ளி முதலிடமும், முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மெட்ரிக் பள்ளி 2ம் இடம் வென்றன.
பெரியகுளம் குறுவட்ட போட்டி- பெரியகுளம்: குறுவட்ட சுதந்திர தின விளையாட்டு தடகள போட்டிகள் நேற்று தோட்டக்கலை கல்லூரி மைதானத்தில் நடந்தது. குறுவட்ட போட்டிகளை தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஏற்று நடத்துகிறது. நேற்று தடகள போட்டி துவக்க விழாவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் சரஸ்வதி துவக்கி வைத்தனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்றல், உடற்கல்வி இயக்குனர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தனர். தடகள போட்டிகளில் 1500 மீ.,400 மீ., 200 மீ.,100 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்று போட்டிகளை நடத்தினர்.