/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாணவர்கள் உடலில் தீபம் ஏற்றி வழிபாடு
/
மாணவர்கள் உடலில் தீபம் ஏற்றி வழிபாடு
PUBLISHED ON : டிச 05, 2025 05:39 AM

கூடலுார்: கார்த்திகை திருநாளை முன்னிட்டு விவசாயம் செழிக்க உடல் முழுவதும் தீபம் ஏற்றி கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி மாணவர்கள் வழிபட்டனர்.
இறைவன் ஜோதி வடிவம் என்பதை உணர்த்துவதற்காக கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்மேகம் என்றால் இருள் நிறைந்தது என பொருள்.
அந்த இருளை நீக்கிடவே தீபம் ஏற்றுவது ஐதீகம். கார்த்திகை, மார்கழி ஆகிய இரண்டு மாதங்களில் விஞ்ஞான ரீதியாகவும் பிரபஞ்ச சக்தி அதிகம் வெளிப்படும்.
அதனால்தான் இந்த இரண்டு மாதமும் விரதம் இருத்தல், அதிகாலை கோயிலுக்கு செல்லுதல், மாலை அணிதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
இந்நிலையில் கார்த்திகை திருநாளை கொண்டாடும் வகையில் கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளி மாணவர்கள் உலகத்தில் பேரழிவிலிருந்து மக்களை காக்கவும், விவசாயம் செழிக்கவும், மழைப் பொழிவை அதிகப்படுத்தவும் வேண்டி யோகா நிலையில் உடல் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பள்ளி முதல்வர்கள் சகிலா சுலைமான், பால கார்த்திகா, மாவட்ட யோகா பயிற்சியாளர் ரவிராம், நிர்வாகிகள் நடராஜன், கணேஸ்வரி, ராகினி, லால்குமார், ஆனந்தி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

