/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி கலை விழாவில் மாணவிகள் அசத்தல்
/
பள்ளி கலை விழாவில் மாணவிகள் அசத்தல்
ADDED : நவ 24, 2025 09:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: இடுக்கி வருவாய் மாவட்ட பள்ளி கலை விழாவில் சிறுமலர் பெண்கள் உயர் நிலை பள்ளி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர்.இடுக்கி மாவட்டம் முரிக்காசேரியில் மாவட்ட அளவிலான பள்ளி கலை விழா கடந்த நான்கு நாட்களாக நடந்தது.
மூணாறில் உள்ள சிறுமலர் பெண்கள் உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 22 மாணவிகள் பங்கேற்றனர். (தமிழ்), மோனோ ஆக்ட், கட்டுரை எழுதுதல், மெல்லிசை, வில்லுப்பாட்டு உள்பட 16 பிரிவுகளில் 'ஏ', 'பி' ஆகிய கிரேடுகள் பெற்று, வெற்றி பெற்றனர். அதில் 10ம் வகுப்பு மாணவி ஷாலிகாஸ்ரீ சொற்பொழிவு தமிழ் பிரிவில் 'ஏ' கிரேடு பெற்று மாநில அளவில் நடக்கும் கலைவிழா போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றார்.

