/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
/
மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேச்சு
ADDED : ஜன 31, 2024 06:37 AM

போடி : 'பணம், சொத்துக்களை சேகரிப்பதை காட்டிலும் மாணவர்களிடம் கல்வி, தலைமைப் பண்புகள், வாசிப்பு திறனை ஊக்குவிக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.' என போடி ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
இப்பள்ளியின் ஆண்டு விழா பள்ளி தாளாளர் சுருளிவேல் தலைமையில் நடந்தது.
செயலாளர் மகேஸ்வரி, தவமணி கணேசன் அறக்கட்டளை அறங்காவலர் காளியம்மாள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, சேலம் வருமான வரித்துறை துணை ஆணையர் முத்து மணிகண்டன், மதுரை உதவி ஆணையர் அம்பேத்கார், தேனி சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் முரளி, ஆடிட்டர் குமரேசன், வழக்கறிஞர் ராஜ்குமார், போடி அறிவுத் திருக்கோயில் செயலாளர் பாலகிருஷ்ணன், ஆக்ஸ்போர்டு மிஷன் பவுண்டேசன் நிறுவனர் குமரேசன் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் முன்னாள் டி.ஜி.பி., மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: மற்றவர்களை காட்டிலும் என்னால் சாதிக்க முடியும் என்ற தைரியத்தை மனதில் ஏற்படுத்தி மாணவர்கள் கல்வி கற்று சிறந்து விளங்க வேண்டும்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டி போடும் வகையில் அறிவியல் தொழில் நுட்பங்களை படித்து புதிய கண்டு பிடிப்புகளை கண்டு பிடிக்கும் வகையில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.
விளையாட்டு, உரிய நேரத்தில் தூக்கம், உரிய நேரத்தில் கல்வி கற்க வேண்டும். வாசிப்பு திறனை ஏற்படுத்த வேண்டும்.
பணம், சொத்துக்களை சேகரிப்பதை காட்டிலும் மாணவர்களிடம் அன்பு செலுத்தி கல்வி, தலைமைப் பண்புகளை வளர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும்.', என்றார்.