UPDATED : நவ 13, 2026 08:36 PM
ADDED : நவ 13, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சமதர்மபுரத்தில் சிறப்பு எஸ்.ஐ., செந்தில்குமார் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் தேனி இன்ஸ்பெக்டர் சரவணனை ராமநாதபுரம் சரகத்திற்கும், எஸ்.ஐ., தினேஷை சிவகங்கை மாவட்டத்திற்கும் பணியிட மாற்றம் செய்து ஜி.ஜி., விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேனி இன்ஸ்பெக்டர் பொறுப்பு அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
