ADDED : ஆக 31, 2026 07:02 PM
கடமலைக்குண்டு, செப்.1-
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை பெற்று பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கடமலைக்குண்டு வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 80 எக்டேர் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சிறு குறு விவசாயிகள் 2 எக்டேருக்கு குறைவாக வைத்துள்ளவர்களுக்கு 100 சதவீதம் மானியம். இரண்டு எக்டேருக்கு அதிகம் வைத்துள்ளவர்களுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் ஒரு விவசாயி அதிகபட்சம் 5 எக்டேர் வரை பயன் பெறலாம். இத்திட்டத்தில் ஏழு ஆண்டுக்கு முன்பு பயனடைந்திருக்கும் விவசாயிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் கடமலைக்குண்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
