ADDED : பிப் 11, 2025 05:23 AM
அ நிறம் | அளவு
போடி: போடி ஜே.கே.பட்டி பக்த சேவா தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 39. கொத்தனார். இவரது மனைவி முத்துமாரி 27. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. முத்துப்பாண்டி மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
குழந்தை இல்லாததால் மனம் உடைந்த முத்துப்பாண்டி விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இறந்தார். போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
