ADDED : ஜூலை 08, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: காமயகவுண்டன்பட்டி பட்டாளம்மன் கோயில் தெருவில் குடியிருந்த கருப்பசாமி 57, இவருக்கு முருகேஸ்வரி 52 என்ற மனைவி உள்ளார். கடன் பிரச்னையால் கருப்பசாமி மனைவியிடம் தினமும் புலம்பினார்.
மனைவி கணவரை சமாதானம் செய்துள்ளார். நேற்று முன்தினம் காமயகவுண்டன்பட்டி சின்ன வாய்க்கால் புளிய மரத்தில் சேலையால் தூக்கு போட்டு கருப்பசாமி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த மனைவி, உறவினர்கள் கருப்பசாமி உடலை இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இராயப்பன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்,