ADDED : செப் 12, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
தேனி: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு தேனி என்.ஆர்.டி., நகர் அரசு மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேனி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சிவக்குமாரன், மருத்துவ கண்காணிப்பாளர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தனர். இதில் தற்கொலை தடுப்பு குறித்து கட்டுரை, கவிதை போட்டிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மருத்துவ மாணவிகள் செய்தனர். டாக்டர் ஈஸ்வரன், மனநல துறை தலைவர் அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
