நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி :போடி பரமசிவன் கோயில் தெருவில் வசித்தவர் சங்கரேஸ்வரன் 29.
இவருக்கு பெற்றோர் பெண் பார்த்துள்ளனர். குடிக்க வேண்டாம் என பெற்றோர் சங்கரேஸ்வரனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். இதனை கேட்காமல் சங்கரேஸ்வரன் பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சங்கரேஸ்வரன் வீட்டின் மேல் மாடியின் அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

