நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே துரைராஜபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் 31. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர் அடிக்கடி மது அருந்தி வந்து உள்ளார். இதனால் இவரது மனைவி இவரை பிரிந்து சென்றார்.
மனம் உடைந்த சிவானந்தம் வீட்டில் ஆட்கள் இல்லாத போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவானந்தத்தின் தந்தை முருகேசன் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

