ADDED : ஏப் 19, 2026 03:31 AM
அ நிறம் | அளவு
தேனி: கோடை உழவு செய்வதன் மூலம் மண்வளம் மேம்படுகிறது. பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் பல மடிகின்றன. இதனால் கோடை உழவு செய்ய வேளாண் துறையினர் விவசாயிகளை அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டுகளில் கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்தாண்டு தேர்தல் அறிவிப்பு வெளியானதால் கோடை உழவு மானியம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பல விவசாயிகள் கோடை உழவில் ஆர்வம் காட்டவில்லை. மானாவரி விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோடை உழவு மானியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
