/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளிவேலப்பர் ஐயப்பா சேவா சங்க படி பூஜை
/
சுருளிவேலப்பர் ஐயப்பா சேவா சங்க படி பூஜை
ADDED : டிச 05, 2025 05:42 AM
கம்பம்: கம்பம் சுருளிவேலப்பர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்களை சபரிமலை யாத்திரைக்கு அழைத்து செல்கிறன்றனர்.
இந்தாண்டு 49 வது ஆண்டு யாத்திரை,படி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படி பூஜை முடிந்த பின் ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பால், தயிர், நெய் , தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட எண்ணற்ற வாசனை திரவிய பொருள்களால் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து ஐயப்பன் ஊர்வலம் வேலப்பர் கோயில் வீதி, மெயின்ரோடு , பெண்கள் - மேல்நிலைப் பள்ளி வீதி வழியாக மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரு முடி சுமந்து தங்களின் யாத்திரையை துவக்கினார்கள். குருசாமி நாராயணன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

