/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் பறவை காய்ச்சல் குமுளியில் கண்காணிப்பு தீவிரம்
/
கேரளாவில் பறவை காய்ச்சல் குமுளியில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் குமுளியில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் குமுளியில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜன 01, 2026 05:52 AM

கூடலுார்: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக இருமாநில எல்லைப் பகுதியான குமுளியில் தமிழக சுகாதாரத் துறையினர், கால்நடை துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகளில் அதிக அளவு கோழிகள், வாத்துகள் உயிரிழந்தன. ஆய்வில் அங்கு பறவை காய்ச்சல் இருப்பதை மத்திய ஆய்வகம் உறுதி செய்தது.
தமிழகத்தில் இதுவரை பறவை காய்ச்சல் கண்டறியவில்லை.ஆனாலும் இருமாநில எல்லை பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் குமுளியில் கால்நடை துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் உதவி கால்நடை மருத்துவர் கார்த்திகா தலைமையில் சோதனை செய்யப்படுகின்றன.
கூடலுார் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பின் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
கால்நடை மண்டல இணை இயக்குனர் இளங்கோ, நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டனர்.
காய்ச்சல் பரிசோதனை மேலும் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதாரத் துறையினர் வாகனங்களில் வருபவர்கள் அனைவரையும் காய்ச்சல் பரிசோதனை செய்து அனுமதிக்கப்படுகின்றனர்.
காய்ச்சல் இருந்தால் முழுமையான பரிசோதனைக்கு பின்பு அனுமதிக்கின்றனர்.

