தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி

ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு பயிற்சி


UPDATED : ஜூலை 15, 2026 05:13 PM

ADDED : ஜூலை 15, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2026 05:13 PM ADDED : ஜூலை 15, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்:உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது.

உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.,சையது முகைதீன் இப்ராகிம் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசண்முகம் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ.,பேசுகையில், மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் உங்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். கணக்கெடுப்பு துல்லியமாக இருக்க உங்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் கவனமாகவும், ஆர்வமாகவும் கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கம்பம் : கம்பம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சமுதாய கூடத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு நகராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்தார். கமிஷனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். புள்ளியியல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us