/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்
/
ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்
ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்
ரூ.70 லட்சம் செலவில் ரோடு அமைக்க சர்வே பணி துவக்கம்
ADDED : டிச 16, 2025 06:07 AM

போடி: போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் சுந்தரராஜபுரம் இணைப்பு ரோடு அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான சர்வே பணிகள் துவங்கி உள்ளன.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது கீழச்சொக்கநாதபுரம். நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கீழச்சொக்கநாத புரத்தில் இருந்து அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் செல்வதற்கு இணைப்பு பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை.
பாதை முழுவதும் முட்புதராக வளர்ந்து இருந்தது. இதனால் கீழச் சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் மக்கள் நடந்து செல்ல முடியாமல், சுற்றிச் செல்லும் நிலையில் சிரமம் அடைந்தனர். இதனால் கீழச்சொக்கநாதபுரம் சுந்தரராஜபுரம் செல்ல ஒரு கி.மீ., தூரம் வடிகால் வசதியுடன் 24 அடி அகலத்தில் தார் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சர்வே பணிகள் துவங்கி உள்ளன.

