/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆக்கிரமிப்புகளை தடுக்க சர்வே பணி
/
ஆக்கிரமிப்புகளை தடுக்க சர்வே பணி
ADDED : டிச 23, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், கண்காணிக்கவும் சர்வே பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் சர்வே செய்து நவீனபடுத்தப்பட்டு வருகின்றன. இப்பணியின் மூலம் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, மீன்வளம் உள்ளிட்ட அரசு துறைகள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. சில நீர்நிலைகளில் சர்வே செய்து, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.

