ADDED : டிச 10, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தகுதி உள்ள நில அளவர்களுக்கு பதவி உயர்வு உயர்வு வழங்கிட வேண்டும்.சிறப்பு திட்டங்களில் பெறப்படும் மனுக்கள், பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் பணிசுமை அதிகரிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
தேனி தாலுகா அலுவலகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு நிர்வாகி மகேஸ்வரன், போடியில் மாவட்ட இணைச்செயலாளர் ராம்குமார், உத்தமபாளையத்தில் கோட்ட கிளைத் தலைவர் கார்த்திகேயன், பெரியகுளத்தில் நிர்வாகி நித்தியானந்தன், ஆண்டிப்பட்டியில் நிர்வாகி ராகுல் தலைமை வகித்தனர்.

