UPDATED : நவ 29, 2026 12:34 AM
ADDED : நவ 29, 2026 12:34 AM
அ நிறம் | அளவு
கம்பம்: த.மா.கா., கட்சியின் 13 ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உயர் மட்டக் குழு உறுப்பினர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராகிம் வரவேற்றார். நகர் தலைவர் குமார், வட்டார தலைவர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
