/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ் வளர்ச்சித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு
/
தமிழ் வளர்ச்சித்துறை விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : டிச 21, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், அரசு, தன்னாட்சி துறைகளில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் ஆகியோர்களுக்கு கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கு, பயிற்சி நடந்தது.
உதவி இயக்குனர் பாப்பாலட்சுமி தலைமை வகித்தார். தேனி தமிழ்ச் சங்க செயலாளரும், துாயத்தமிழ் பற்றாளர் விருது பெற்ற எழுத்தாளர் தேனி சுப்பிரமணி பயிற்சி அளித்தார். தமிழ்வளர்ச்சித்துறை அலுவலக ஊழியர் மஞ்சுளா நன்றி தெரிவித்தார்.

