/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ் ஆட்சி மொழி விழிப்புணர்வு ஊர்வலம்
/
தமிழ் ஆட்சி மொழி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : டிச 27, 2025 05:53 AM

தேனி: தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், டிச.17 முதல் இன்று (டிச.27) வரை ஆட்சி மொழி சட்ட வார விழா நடந்து வருகிறது. நேற்று பங்களாமேட்டில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது.
ஊர்வலத்தை டி.ஆர்.ஓ., ராஜகுமார் துவக்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாப்பாலட்சுமி முன்னிலை வகித்தார். மதுரை- தேனி ரோடு வழியாக நேருசிலை வரை சென்று, மீண்டும் வழியாக துவங்கிய இடத்தில் நிறைவடைந்தது.
பல்வேறு பள்ளிக் கல்லுாரி மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்று, தமிழ் எங்கள் உயிர்; தமிழ் எங்கள் மொழி, அலுவலக தமிழ், தவறாமல் பயன்படுத்து வோம், ஆட்சி மொழிச் சட்டம் நம் உரிமை, கடமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

