ADDED : பிப் 08, 2026 06:06 AM
தேனி தேனி திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டறையில் படித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதற்கான வெற்றி விழா, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் அசோகன் வரவேற்றார்.
ஒருங்கிணைந்த பள்ளிகல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை தலைவர் சரவணன், தேனி ரோட்டரி சங்க தலைவர் ஷியாமளா, மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், தலைவர் ஜெயக்குமார், முன்னிலை வகித்தனர். பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பட்டிமன்ற நடுவர் மாரிமுத்து, மகேஷ், பாக்கியலட்சுமி, கோபிநாத், பிருந்தாதேவி, எழிலரசி, தனபால் உள்ளிட்டோர் பேசினர். அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் சீனிவாசபெருமாள் நன்றி கூறினார். சேவியர் பீட்டர் பால்ராஜ், யாகதேவன், முருகவேல், நாகராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
