நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்:உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் நேற்று ஆசிரியர் தின விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் பேராசிரியர்களை கவுரவப்படுத்தினர்,
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர் கல்லூரி முதல்வர் எச்.முகமது மீரானுக்கு சிறந்த கல்லூரி முதல்வர் விருது வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் முகமது மீரான் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்று முதல்வர் மற்றும் பேராசிரியர்களை வாழ்த்தினர்.