ADDED : செப் 07, 2026 12:34 AM
அ நிறம் | அளவு
தேனி: சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவிய போட்டிகள் நடத்தது. ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சரவணன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் பள்ளி முதல்வர் பரந்தாமன் தலைமையில் விழா நடந்தது. சங்க செயலர் பாக்கியகுமாரி முன்னிலை வகித்தார். விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வர் வினோத்குமார் நன்றி கூறினார். மேலாளர் கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
