ADDED : செப் 14, 2026 01:08 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் 'பெற்றோர்களை கொண்டாடு வோம்' என்ற தலைப்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழா கொண்டாடினர்.
பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம், நிர்வாகி தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பெருமாள் சாமி, முதன்மை கல்வி அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் ஆசிரியர்களின் சிறப்பு குறித்து பேசினர்.
பள்ளி செயலாளர் மேத்யூ ஜோயல், முதல்வர் உமாமகேஸ்வரி பேசினர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பள்ளி நிர்வாகத்தினர் கவுரவித்தனர்.
