தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சான்றிதழ்கள் வழங்கஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சான்றிதழ்கள் வழங்கஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

சான்றிதழ்கள் வழங்கஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


ADDED : செப் 10, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, செப்.11–மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மாவட்டத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கலெக்டர்கள் மூலம் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறையினர் ஒருங்கிணைப்பார்கள். இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், தேர்ச்சி பெற வைத்த பாட ஆசிரியர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த பள்ளிகள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்க தயாரான போது கலெக்டர் ரஞ்சித் சிங் மாறுதல் செய்யப்பட்டார்.அதனால் விருது வழங்கும் விழா ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது தயாரிக்கப்பட்ட கேடயம், சான்றிதழ்களில் முந்தைய கலெக்டர் பெயர் இருந்ததால் தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது.

எனவே, புதிய கலெக்டர் பெயரில் கேடயம்,சான்றிதழ் தயார் செய்து வழங்கிட ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us