தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


ADDED : மார் 02, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 8 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளனர். உண்ணாவிரதத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயராணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரேந்திரபாபு முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் சிலம்பரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடந்த உண்ணாவிரதத்தை முடித்து கொண்டு, சென்னையில் நடக்க உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us