ADDED : ஜன 13, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம், : உத்தமபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை எண் 243 ஐ ரத்து செய்தல் உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி உத்தமபாளையம் வட்டார தலைவர் பழனிக்குமார் தலைமை வகித்தார். பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். வரும் ஜன. 27 ல் தேனியில் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.