ADDED : மார் 06, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் சிலம்பரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மாவட்ட செயலாளர் வீரேந்திரபிரபு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

