UPDATED : ஆக 20, 2026 07:38 PM
ADDED : ஆக 20, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆசிரியர் கூட்டணி செயலாளர் சரவணமுத்து தலைமை வகித்தார்.
ஆசிரியர் மன்றம் செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில செயற்குழு ராஜாராம் பாண்டியன், மாவட்ட செயலாளர் ராஜவேல், மாநில பொதுக்குழு சுகுணா உட்பட பலர் பேசினர். சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 40 சதவீதம் என நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
