/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் அவதி
/
மாற்றுப் பணி ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் அவதி
ADDED : ஆக 21, 2025 08:22 AM
தேவதானப்பட்டி : எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க 9 பேர் மாற்றுப் பணியில் பணிபுரிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவில், 5 ஆசிரியர்கள் வந்துள்ள நிலையில், 4 ஆசிரியர்கள் 3 மாதங்களாக வரவில்லை இதனால் கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டு மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 30 க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை 1950 பேர் படிக்கின்றனர். இதில் எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை கடந்தாண்டு 400 பேர் படித்தனர். தற்போது 100 பேர் கூடுதலாக சேர்த்து 500 மாணவர்கள் படித்த வருகின்றனர். இவர்களுக்கு 11 ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டனர். பெரியகுளம் வட்ட அளவில் அரசு ஒன்றியம் பள்ளிகளில் உபரியாக 52 ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 60 ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டது.
இவர்களில் 9 பேரை மாற்றுப் பணிக்கு ஜூன் 11 முதல் சில்வார்பட்டி பள்ளியில் பணிபுரிய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இவர்களில் 5 பேர் பணிக்கு வந்தனர். 4 பேர் வரவில்லை. இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமல் கற்பித்தல் பணிகள் தொய்வடைந்துள்ளன.
அலட்சியம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில்வார்பட்டியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர்கள் குழுவினர் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.