/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
தேனியில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 06, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் சி.இ.ஓ., அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்க மாவட்ட செயலாளர் விஜயேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மாசாணன், துணைச்செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் வேல்முருகன், சதீஷ் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சில பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற வில்லை.

