ADDED : செப் 09, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
தேனி,செப்.
10–ஆண்டிபட்டி தாலுகா மேக்கிழார்பட்டியில் ‘என்பட்டு என் பெருமை’ திட்டத்தில் பட்டு விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மத்திய பட்டு வாரிய விஞ்ஞானிகள் மகிமாசாந்தி, லோகிதஷ்வா பயிற்சி அளித்தனர். மல்பெரி செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. மேலும் ஒருங்கிணைத்த உர மேலாண்மை, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, மல்பெரி தோட்ட பராமரிப்பு, இளம்புழு வளர்ப்பு, தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டன. ஏற்பாடுகளை சமயநல்லுார் மத்திய பட்டுவாரிய ஆராய்ச்சி விரிவாக்க மையம், மாநில பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர்.
