ADDED : பிப் 05, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: முத்துக்கிருஷ்ணாபுரம் செல்வ விநாயகர், காளியம்மன், சீனிவாச பெருமாள், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் விநாயகர் வழிபாடு, புனித தீர்த்த குடம் அழைப்பு செய்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.
அதனைதொடர்ந்து நடந்த 4ம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணா ஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளுக்கு பின் கோயில் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடந்தது.
வானத்தில் வட்டமிட்ட கருடனை கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வணங்கினர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்