/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வளர்ச்சிப் பணிக்களுக்கான 'டெண்டர்' ஒத்திவைப்பு
/
வளர்ச்சிப் பணிக்களுக்கான 'டெண்டர்' ஒத்திவைப்பு
ADDED : ஆக 21, 2025 08:19 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரூ.61 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு நேற்று நடந்த டெண்டர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் டி.சுப்புலாபுரம், கோத்தலுாத்து, சண்முகசுந்தரபுரம், ஜி.உசிலம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடம், கழிப்பறை கட்டடம் ஆகியவற்றை பராமரிப்பு செய்வதற்காக 11 பணிகளுக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் 'இ டெண்டர்' நடப்பதாக இருந்தது.
டெண்டர் கேட்டு பலர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிர்வாக காரணத்திற்காக தேதி குறிப்பிடாமல் டெண்டரை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறியதாவது: இ டெண்டரில் விண்ணப்பித்திருந்த பலரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
தி.மு.க.,வினர் பலர் விண்ணப்பிக்கவில்லை. டெண்டர் குறித்து ஒப்பந்ததாரகளிடம் பேச்சு வார்த்தைக்கும் வாய்ப்பில்லை. இதனால் அதிகாரிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்., என்றனர்.