நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : கண்டமனூர் அருகே கோவிந்தநகரத்தை சேர்ந்தவர் சீனியம்மாள் 33, அவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இவருக்கு ரஞ்சித் 13, கனிஷா 11 என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ரஞ்சித் கோவிந்தநகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சரிவர செல்லாத மகன் ரஞ்சித்தை தாயார் கண்டித்து வந்துள்ளார்.
டிசம்பர் 11 ல் ரஞ்சித் தனது பாட்டி வீட்டிற்கு சென்று தூங்கி உள்ளார். மறுநாள் காலை வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை.
இது குறித்து உறவினரிடம் விசாரித்தும் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தாயார் புகாரில் கண்டமனூர் போலீசில் விசாரிக்கின்றனர்.