ADDED : ஏப் 27, 2026 05:19 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிப்பட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டி பல்லவராஜா. இவரது மகன் ரித்தீஸ் முத்து 8, திம்மரசநாயக்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சிறுவன், நேற்று முன் தினம் ஆடு மேய்க்கு செல்வதாக தந்தையிடம் கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சிறுவனின் தாயார் அம்சவள்ளி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
