/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கடந்தாணடு 11,945.7 மி.மீ., மழை பதிவு 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவு

ADDED : ஜன 03, 2026 05:54 AM
தேனி: மாவட்டத்தில் 2025ல் 11,945.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த அளவு கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் மிக குறைவாகும்.
தேனி மாவட்டம் கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையில் மட்டுமின்றி, தென்மேற்கு பருவமழையிலும் பயனடையும் சில மாவட்டங்களில் தேனியும் ஒன்றாகும். மாவட்டத்தில் வழக்கத்தை விட குறைந்த அளவில் கடந்த ஆண்டு மழை பதிவானது.
கடந்தாண்டு 2025ல் ஆண்டிபட்டியில் 660.2 மி.மீ., அரண்மனைப்புதுார் 524.4 மி.மீ., போடி 596.4 மி.மீ., கூடலுார் 611.8 மி.மீ., மஞ்சளாறு 690.4 மி.மீ., பெரியகுளம் 902.2 மி.மீ., பெரியாறு அணை 2586.2 மி.மீ., சோத்துப்பாறை 820 மி.மீ., தேக்கடி 2043.4 மி.மீ., உத்தமபாளையம் 651.9 மி.மீ., வைகை அணை 471.2 மி.மீ., வீரபாண்டி 632.6 மி.மீ., சண்முகாநதி அணை 755 மி.மீ., என மொத்தம் 11,945.7 மி.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக அக்டோபரில் 2759.8 மி.மீ., குறைந்தபட்சமாக பிப்.,ல் 7.8 மி.மீ., மழை பதிவானது.
2021ல் 17,091.80 மி.மீ., 2022ல்15,585.80 மி.மீ., 2023ல் 14,030.7 மி.மீ., 2024ல் 14,374 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
இவற்றை ஒப்பிடுகையில் 2025ல் பதிவான மழை அளவு மிக குறைவாகும்.