நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருமன் 75, இவரது மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் முடித்த ஐந்து மகள்களும் வெளியூரில் வசிக்கின்றனர். திருமன் தனது மனைவியுடன் கொண்டமநாயக்கன்பட்டி சத்யா நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருமன் போடியில் உள்ள தனது பேரன்களை பார்க்க செல்வதாக கூறி சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமன் மனைவி கதிரியம்மாள் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் முதியவரை தேடி வருகின்றனர்.