/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கழிப்பிடம் கட்டியும் பாதாள சாக்கடை இணைப்பு இன்றி அவதி பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு மக்கள் சிரமம்
/
கழிப்பிடம் கட்டியும் பாதாள சாக்கடை இணைப்பு இன்றி அவதி பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு மக்கள் சிரமம்
கழிப்பிடம் கட்டியும் பாதாள சாக்கடை இணைப்பு இன்றி அவதி பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு மக்கள் சிரமம்
கழிப்பிடம் கட்டியும் பாதாள சாக்கடை இணைப்பு இன்றி அவதி பெரியகுளம் நகராட்சி 14 வது வார்டு மக்கள் சிரமம்
ADDED : டிச 06, 2025 05:19 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தென்கரை 14 வது வார்டு தோட்டிகாலனி தெருவில் உள்ள வீடுகளில் கழிப்பிட வசதி செய்தும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் நகராட்சி 14வது வார்டில் விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைகின்றனர். கழிவுநீர் செல்ல முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி, கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். வராகநதி ஆற்றங்கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டாததால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்கு நீர் வளத்துறையினர் பல முறை அளவீடு செய்தும் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை இல்லை. வராகநதியை ஒட்டி கழிவுநீர் உந்து நிலையத்திலிற்கு செல்லும் பாதாளச்சாக்கடை மெகா சைஸ் குழாய் அவ்வப்போது உடைந்து கழிவுநீர் வராகநதியில் கலக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றத்தினால் பொதுமக்கள் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை என புலம்புகின்றனர். வார்டு மக்கள் கூறியதாவது:
பாலம் அமைக்க வேண்டும் கார்த்திக், பெரியகுளம்: தோட்டி காலனி மற்றும் அப்பகுதிக்கு அருகேயுள்ள மக்கள் வராகநதியை கடந்து செல்வதற்கு குறுக்கே மாசாணம் கோயிலிருந்து பாலம் கட்டி தர பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் வராகநதியில் இறங்கி அசு த்த நீரில் நடந்து அக்கரைக்கு செல்லும் நிலை உள்ளது. வெள்ளத்தடுப்புச் சுவர் கட்டப்படாததால், மழை காலங்களில் வராகநதி வெள்ளத்தால் மக்கள் அச்சத்துடன் வசிக்கின்றோம். அசம்பாவிதம் நடப்பதற்குள் வெள்ளத்தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.
பாதாளச்சாக்கடை இணைப்பு இல்லை ஜானகி, பெரியகுளம்: எங்கள் தெரு அருகே கண்ணுக்கு எட்டும் தூரம் நகராட்சி பாதாளச்சாக்கடை மெகா சைஸ் குழாய் செல்கிறது. ஆனால் எங்கள் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கு ஏனோ நகராட்சி நிர்வாகம் தாமதிக்கிறது. பல மாதங்களுக்கு முன்பே வீடுகளில் கழிப்பிடம், பாத்ரூம் காட்டியுள்ளோம். இணைப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கர்ப்பிணிகள் சிரமம் முத்துலட்சுமி, பெரியகுளம்: இந்தப்பகுதியில் கட்டப்பட்ட சாக்கடை சிறு பாலம் உயரமாக உள்ளது. இரண்டு அடி பள்ளத்தில் உட்கார்ந்து இறங்கி செல்லும் அவல நிலை உள்ளது. கர்ப்பிணிகள், வயதில் மூத்தோர் அவதிப்படுகின்றனர். சாக்கடை பாலத்தை ஒட்டி படிக்கட்டு அல்லது சாய்வு தளம் அமைக்க வேண்டும். தெருக்களில் பேவர் பிளாக் ஏற்றம், இறக்கமாக உள்ளது. குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பை தினமும் அகற்ற வேண்டும். -

