ADDED : செப் 16, 2026 05:32 PM
பெரியகுளம், செப். 17-
பெரியகுளம் பகுதியில் ஜீனி விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்ததால், லட்சுமிபுரம் மார்க்கெட்டில் வெல்லம் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
பெரியகுளம் பகுதியில் கடந்த மாதம் ஒரு கிலோ ஜீனி விலை ரூ.45 லிருந்து, வரத்து குறைவினால் அடுத்தடுத்த நாட்களில் கிலோவிற்கு ரூ.25 அதிகரித்து ரூ.70 க்கு விற்றது. இதனால் சில கடைக்காரர்கள் ஜீனி மூடைகளை பதுக்கினர். கிலோ ரூ.80 வரை விற்றது. இதனால் ஜீனியை பயன்படுத்தியவர்கள் வெல்லத்தை உபபோயகப்படுத்த துவங்கினர். மேலும் ஓணம் பண்டிகைக்கு கேரளாவில் வெல்லம் தேவை அதிகரித்தது. இதனால் லட்சுமிபுரம் வெல்லம் மார்க்கெட்டில் மூட்டைக்கு ரூ.500 அதிகரித்து, (42 கிலோ) மூடை முதல் ரகமான பச்சை வெட்டு வெல்லம் ரூ.2,700, இரண்டாம் ரகமான ரோஸ் வெல்லம் ரூ.2500, மூன்றாம் ரகமான செங்கால் ரூ.1,800,
நான்காம் ரகமான கருப்பு ரூ.1,700 க்கு விற்பனையானது.
தற்போது ஜீனி கிலோ ரூ.60 ஆக குறைந்தது. இதனால் லட்சுமிபுரம் வெல்லம் மார்க்கெட்டில் மூட்டைக்கு ரூ.400 குறைந்தது. இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் நிலையில், சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் வெல்லம் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
--
