/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரக்கூடத்தை பயன்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
/
உரக்கூடத்தை பயன்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
உரக்கூடத்தை பயன்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
உரக்கூடத்தை பயன்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
ADDED : மே 16, 2025 04:11 AM

போடி:போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உள்ள நுண் உரக்கூடத்தை முழுமையாக செயல் படுத்தாததால் குப்பையை தீ வைப்பதால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பையை மறு சுழற்சி செய்யும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு உரக்கூடம் பெரிய அளவில் இல்லாததால் முழுமையாக மறுசுழற்சி செயல்படுத்த முடியவில்லை.
இதனால் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகே கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் ரோட்டில் செல்லும் மக்கள், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சுவாச பிரச்னையால் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுவதை தடுக்க சேகரமாகும் குப்பைகளை மெயின் ரோட்டோரம் கொட்டி தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.