/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் விறுவிறுப்பு இன்றி நடந்த ஆட்டுச்சந்தை
/
ஆண்டிபட்டியில் விறுவிறுப்பு இன்றி நடந்த ஆட்டுச்சந்தை
ஆண்டிபட்டியில் விறுவிறுப்பு இன்றி நடந்த ஆட்டுச்சந்தை
ஆண்டிபட்டியில் விறுவிறுப்பு இன்றி நடந்த ஆட்டுச்சந்தை
ADDED : அக் 14, 2025 04:24 AM

ஆண்டிபட்டி: தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் உள்ள நிலையில் ஆண்டிபட்டியில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தை விறுவிறுப்பின்றி மந்த நிலையில் இருந்தது.
ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும். வாரச்சந்தையில் காலையில் நடக்கும் ஆட்டுச் சந்தை முக்கிய இடம் பிடிக்கிறது.
அடுத்த வாரம் தீபாவளி துவங்க உள்ள நிலையில் நேற்று ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
தீபாவளியை முன்னிட்டு ஆட்டுச் சந்தை விறுவிறுப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆடு வளர்ப்போர் காத்திருந்தனர்.
ஆனால் ஆடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள், பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இதனால் ஆடு வியாபாரம் மந்த நிலையில் இருந்தது.
வியாபாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தைக்கு சுற்றியுள்ள நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தற்போதுள்ள சீதோஷ்ண நிலை வளர்ப்புக்கு ஏற்றதாக இல்லை. இதனால் வளர்ப்புக்காக ஆடுகள் வாங்குவது குறைந்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஆண்டிபட்டியில் வாரச்சந்தை கூட இருப்பதால் அன்றைய தினம் தீபாவளி தேவைக்கு ஆடுகள் விற்பனையாகும். தீபாவளிக்காக முன்கூட்டியே வாங்கி பாதுகாக்க பொதுமக்கள் வியாபாரிகளிடம் ஆர்வம் இல்லை என்றனர்.