ADDED : டிச 29, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நிறுத்தி இருந்த ஆட்டோவை படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது. கன்னிமலை எஸ்டேட், டாப் டிவிஷனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ஆட்டோ நேற்று முன்தினம் பழுதடைந்ததால், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பாலம் பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றார்.
அந்த ஆட்டோவை நள்ளிரவில் படையப்பா ஆண் காட்டு யானை சேதப்படுத்தியது.
அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக படையப்பா முகாமிட்டது. அதனை வனத்துறையின் அதிரடி படையினர் கண்காணித்து வருகின்றனர்.

