ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், செப். 2--–
பெரியகுளம் வடுகபட்டி நாடார் தெரு ராமகிருஷ்ணன் 60. தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவரது வீட்டில் இவரது மனைவி குப்பை கொட்டுவதற்காக வெளியே சென்றார். அப்போது எண்டப்புளி ரெங்கநாதன் 38, வீட்டிற்குள் நுழைந்து ரூ.350 திருடினார். இதனை ராமகிருஷ்ணன் பார்த்தார். அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் ரெங்கநாதனை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ரெங்கநாதனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
--
