/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி இறந்த சோகம் முதியவர் தற்கொலை
/
மனைவி இறந்த சோகம் முதியவர் தற்கொலை
ADDED : நவ 25, 2025 01:31 AM
தேனி: மேகமலை காந்திபுரம் சுருளியப்பன் 70. இவர் மனைவி 20 நாட்களுக்கு முன் இறந்தார். இதனால் ஓடைப்பட்டி சத்யாநகரில் வசிக்கும் தனது மகன் ராஜேந்திரன் வீட்டில் தங்கியிருந்தார்.
நவ.23ல் அதிகாலை 4:00 மணிக்கு வீட்டின் கழிவறையில் சத்தம் கேட்டு ராஜேந்திரனும், அவரது மனைவியும் சென்று பார்த்தனர். விஷம் குடித்த காலி டப்பா அருகில் இருந்தது.
தந்தையிடம் விசாரித்தார். அப்போது மனைவி இறந்த துக்கத்தில் விஷம் குடித்துவிட்டேன் என முதியவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

