UPDATED : ஜூன் 06, 2026 08:26 PM
ADDED : ஜூன் 06, 2026 07:21 PM
போடி:'த.வெ.க., வில் கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை ' என இ.கம்யூ., முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா கூட்டணி பா.ஜ.,விற்கு மாற்றாக செய்யப்பட்ட கூட்டணி. காங்., தலைமை தாங்கி மற்ற கட்சிகளை இணைத்து செயல்படுகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் காங்., சார்ந்தது. இவர்கள் போனால் அவர்கள் வருவார்கள், அவர்கள் போனால் இவர்கள் வருவார்கள் என பேசுவது இந்தியா கூட்டணியை ஒருங்கிணைப்பதற்கும், பலப்படுத்ததுவதற்கும் பயன்படாது. த.வெ.க., பச்சிளம் குழந்தை. வளர்ந்த பின்தான் குழந்தை தேறுமா என தெரியும். பொறுத்து இருந்து பார்ப்போம். த.வெ.க., வில் கொள்கை, கோட்பாடு என்று எதுவும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ., மறைமுக ஆட்சி நடத்த இருந்ததே தவிர்க்கவே இ.கம்யூ., மா.கம்யூ., வெளியில் இருந்து ஆதரவை தெரிவித்து உள்ளோம் என்றார்.
