ADDED : ஜன 23, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், நல்லகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 55. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே மளிகை கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், இதே போல் தெற்கு தெருவைச் சேர்ந்த முனிசாமி பெட்டிக்கடை பூட்டை உடைத்து ரூ.3,500 திருடி சென்றனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

