/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பிஸினஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்
/
தேனி பிஸினஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்
தேனி பிஸினஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்
தேனி பிஸினஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி கருத்தரங்கம்
ADDED : டிச 21, 2025 06:22 AM

தேனி: தேனி பிஸ்னஸ் போரத்தின் வியாபார வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம், பார்வையாளர்கள் கூட்டம் நடந்தது. போரத்தின் இயக்குநர், நிறுவனர் மாஸ்டர் சேப்டி முத்துசெந்தில்குமார் தலைமை வகித்தார்.
பட்டயத்தலைவர் பால்பாண்டி, தலைவர் விஜயகுமார், செயலாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பேசுகையில், 'தேனி பிஸினஸ் போரத்தின் பயன்கள், வியாபார முறை, ஜி.எஸ்.டி., பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தொழில் முனைவோர்கள் முன்னேறுதல்,' பற்றி பேசினார். ஈடன் கார்டன் உரிமையாளர் கென்னடி கவுரவிக்கப்பட்டார். 'கம்பத்தில் போரத்தின் விரிவாக்க பணிகள் நடக்கிறது, விரைவில் போடியில் துவங்க உள்ளோம்' என இயக்குனர் முத்து செந்தில்குமார் கூறினார்.
கூட்டத்தில் போரத்தின் முன்னாள் தலைவர்கள் வைகை ஆப்டிக்கல்ஸ் வெங்கடேஷ், ஜெய் மார்க்கெட்டிங் அருண்குமார், சிவக்குமார் முட்டை நிலையம் அருண்குமார், ஜோதிடர் பாலகிருஷ்ணன், நேஷனல் வாட்டர் பிரதீப் செல்லதுரை, உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பாளர் நாகமோட்டார் முத்துக்குமார், அரங்க ஒருங்கிணைப்பாளர் ருலோன் விக்னேஷ், உறுப்பினர்களின் நல்லுறவு தொடர்பாளர் எல்.ஐ.சி., ரெங்கராஜன், உறுப்பினர்களின் வணிக மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் வி.டூ., ஈவன்ஸ் வெங்கடேஷ், உறுப்பினர்களின் வணிக விளக்க உரை ஒருங்கிணைப்பாளர் சோலார் பவர் ராஜேஷ்வரமூர்த்தி, ஊடக ஒருங்கிணைப்பாளர் நாகா கார்த்திகேயன், போரத்தின் அணி தலைவர்கள் ராகேஷ்குமார், பர்வீன்குமார், சரவணன் ஜெயராமன், விவேக் கார்த்திக், கார்த்திக்குமார், தர்ஷினி, திலீப்குமார், அரசன் மணிகண்டன், தினேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேனி பிஸினஸ் போரத்தின் நிர்வாகிகள், அணித்தலைவர்கள் செய்திருந்தனர்.

